வியட்நாம் கம்யூனிஸ்டு தலைவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

பிரதமர் மோடி நேற்று வியட்நாம் நாட்டின் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் நிகுயன் பு திராங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
இரு நாடுகளுக்கிடையே தூதரக உறவு தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

வியட்நாமின் முக்கியத்துவத்தை புகழ்ந்த மோடி, இருதரப்பு உறவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இந்திய மருந்து பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கு வியட்நாமில் சந்தை அனுமதியை பெரிய அளவில் அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.

இரு நாடுகளின் சரித்திர, கலாசார தொடர்புகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். வியட்நாமில் உள்ள சாம் நினைவுச்சின்னங்களை மறுசீரமைத்ததில் இந்தியாவின் பங்கை நினைவுகூர்ந்தார்.

உக்ரைன் போர், தெற்கு சீன கடல் நிலவரம் உள்ளிட்ட பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.