பாசஞ்சர் ரயில் இல்லாத தெற்கு ரயில்வே: எல்லாமே எக்ஸ்பிரஸ் தான்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் தெற்கு ரயில்வேயில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில் என்ற பெயரில், எக்ஸ்பிரஸ் கட்டணத்துக்குரிய ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.

கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தபின், பொதுபோக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டபோது, தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்ட பெரும்பாலான பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படவே இல்லை. சில ரயில்கள் மட்டும், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.