பஞ்சாபில் 300 யூனிட் இலவச மின்சாரம்; பஞ்சாப் அரசு அறிவிப்பு
சண்டிகர்; பஞ்சாபில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பக்வந்த் மான் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி உறுதி அளித்திருந்தது. இதனை நிறைவேற்றுவது தொடர்பாக டில்லி சென்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், அம்மாநில முதல்வருமான கெஜ்ரிவாலை, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் வரும் 16 ம் தேதி பஞ்சாப் மக்களுக்கு மிகப்பெரிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனக்கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.