பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்!
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின், ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் இன்று (16ம் தேதி) காலை 6.30 மணியளவில் எழுந்தருளினார்.
சைவமும், வைணவமும் இணையும் வகையில், மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 5 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதைதொடர்ந்து நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.