ஒராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:முதல்வர்!

சென்னை: ஒராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு லட்சமாவது மின் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவை உளூந்தூர்பேட்டையை சேர்ந்த விவசாயிக்கு வழங்கினார். தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து விவசாயிகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது: அதிகபட்சமாக திருப்பூரில் 7,517 விவசாயிகளுக்கும், கிருஷ்ணகிரியில் 6,906, தர்மபுரியில் 6,816, திருவண்ணாமலையில் 6,527 பேருக்கும், திண்டுக்கல்லில் 5,916 பேருக்கும், கோவையில் 5,604 பேருக்கும் கள்ளக்குறிச்சியில் 5,364 பேருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.