ஷோபியான் நகருக்கு செல்ல திட்டமிட்ட மெகபூபாவுக்கு வீட்டு சிறை!
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்த காஷ்மீாி பண்டிட் பால் கிருஷ்ணன் குடும்பத்தினரை சந்திப்பதற்காக அவரது வீடு இருக்கும் ஷோபியான் நகருக்கு மெகபூபா செல்ல திட்டமிட்டு இருந்தாா்.
இந்த நிைலயில் நேற்று பாதுகாப்பு வாகனம் ஒன்று அவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. மெகபூபா வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை என்று மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மெகபூபா வெளியிட்ட டுவிட்டா் பதிவில், “காஷ்மீா் பண்டிட் தாக்குதலையடுத்து அவரது குடும்பத்தினரை நான் சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், என்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர்” என்று கூறி உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.