மதுரைக்கு ஏப்.16 உள்ளூர் விடுமுறை!
சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் ஏப்.16 உள்ளூர் விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், வங்கிகள் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.