பூஸ்டர் டோஸ் இடைவெளியை 6 மாதமாக குறைக்க கோரிக்கை!

‘கொரோனா தடுப்பூசி இரண்டாவது ‘டோஸ்’ மற்றும் ‘பூஸ்டர் டோஸ்’ போடுவதற்கான காலத்தை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்’ என ‘சீரம்’ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா கூறியதாவது: கொரோனா வைரசின் உருமாறிய வகைகள் புதிது புதிதாக வருகின்றன. இதையடுத்து மக்களின் பாதுகாப்பிற்காக கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான இடைவெளியை தற்போதைய ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.