ஹர்ஷல் பட்டேலின் சகோதரி மரணம்!!!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் குஜராத்தை சேர்ந்த ஹர்ஷல் பட்டேலின் சகோதரி இறந்து விட்டார். நேற்று முன்தினம் புனேயில், மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த பேரிடி செய்தி அவருக்கு கிடைத்தது.
இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய அவர் ஆட்டம் முடிந்ததும் உடனே கிளம்பி விட்டார். ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கான கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) இருந்து வெளியேறி உள்ள ஹர்ஷல் பட்டேல் நாளை நடக்கும் சென்னைக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக அணியுடன் மீண்டும் இணைந்து விடுவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் அவர் 3 நாள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.