2, 3 ஆண்டு பொறுத்திருந்து பாருங்கள்; எச்சரிக்கும் ராகுல்!
புதுடில்லி: கடந்த 2, 3 ஆண்டுகளில் ஊடகங்கள், பா.ஜ., தலைவர்கள், ஆர்எஸ்எஸ் ஆகியவை உண்மையை மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி., ராகுல், இலங்கையை போல இந்தியாவிலும் உண்மை வெளிவரும் எனவும், தேசம் பிளவுபட்டு இருப்பதால் வன்முறை நிகழும் 2, 3 ஆண்டுகள் பொறுத்திருந்து பாருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், உடல்நலக் குறைவால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் ஷரத் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரத் யாதவ் உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் எனக்கு அரசியல் குறித்து நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஷரத் யாதவ் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். வெறுப்புணர்வு பரப்பப்பட்டு நாடு பிளவுப்படுத்தப் படுகிறது. தேசத்தை ஒன்றிணைத்து, நமது வரலாற்றின் ஒரு அங்கமான சகோதரத்துவத்தின் பாதையில் நடக்க வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.