முதல்வர் குறித்து அவதூறு: பா.ஜ., நிர்வாகி கைது!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ., பிரசார அணித் தலைவர் ஜெயப்பிரகாஷ் உரையாற்றியபோது, முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக.,வினர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார், ஜெயபிரகாஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று (ஏப்.,7) நள்ளிரவு இரணியலில் உள்ள அவரது வீட்டிற்கு நாகர்கோவில் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் தலைமையில் சென்ற போலீசார், ஜெயப்பிரகாஷை கைது செய்தனர். நள்ளிரவில் பா.ஜ., நிர்வாகி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.