தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணிகள் கால்இறுதிக்கு தகுதி!!

71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 2-வது கட்ட லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 87-63 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்தது. 

லீக் சுற்று முடிவில் இந்தியன் ரெயில்வே, அசாம், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாப்பை (மாலை 4 மணி) சந்திக்கிறது.
அதே சமயம் ஆண்களுக்கான 2-வது கட்ட லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 85-74 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை சாய்த்து தொடர்ச்சியாக 5-வது வெற்றியை தனதாக்கியது. 
லீக் சுற்று முடிவில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட், சர்வீசஸ், இந்தியன் ரெயில்வே, கர்நாடகா, அரியானா அணிகள் கால்இறுதியை எட்டின. கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, கேரளாவை (இரவு 7.15 மணி) எதிர்கொள்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.