சென்னையில் குடிநீர் பற்றாக்குறை 340 மில்லியன் லிட்டர்: அமைச்சர் நேரு!
சென்னை: ”சென்னையின் குடிநீர் பற்றாக்குறை நாள்தோறும் 340 மில்லியன் லிட்டராக உள்ளது,” என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
இதுகுறித்து, சட்டசபையில் அமைச்சர் நேரு அளித்த பதில் உரையில் கூறியதாவது:சென்னையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்காக, பட்ஜெட்டில் சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. சிங்கார சென்னை 2.0 திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.