அமெரிக்காவில் கிரீன் கார்டு கட்டுப்பாடு தளர்வு: இந்தியர்கள் வரவேற்பு!!

கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை நீதித்துறைக்கான அமெரிக்க எம்.பி.,க்கள் குழு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதா சட்டமானால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பயனடைவர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் பலர், பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடியேறுகின்றனர். அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டுமென்றால் கிரீன் கார்டு பெற வேண்டும். அதனால் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும் என்பதால், கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகளவில் காத்திருக்கின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.