ஏலத்தில் மாரடோனா ஜெர்சி; ரூ.60 கோடி கிடைக்க வாய்ப்பு !!!
மான்செஸ்டர்: ‘கடவுளின் கை’ உதவியால் கோல் அடித்த போது மாரடோனா அணிந்த ‘ஜெர்சி’ ஏலம் விடப்பட உள்ளது.
கால்பந்து ‘ஜாம்பவான்’ மறைந்த மாரடோனா 60. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் 4 முறை உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். 1986ல் அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பை வென்று தந்தார். இத்தொடரின் காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக, தனது இடது கையை பயன்படுத்தி, கோல் (51வது நிமிடம்) அடித்து சர்ச்சை கிளப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” அது கடவுளின் கை’ என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.