என்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்காதீங்க..: திமுக எம்எல்ஏ.,க்களுக்கு ஸ்டாலின் கண்டிப்பு!!
சட்டசபையில் திமுக எம்எல்ஏ.,க்கள் பேசுகையில் என்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஏப்.,7) நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில், கேள்வி நேரத்தின் போது, ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சண்முகையா, முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேச்சை துவக்கினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‛என்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.