ஆணாக மாற ஆப்ரேஷன் செய்ய ஓடிப்போன ஓரின காதல் இளம்பெண்கள்!!

பெரம்பலூர்: தன்பால் ஈர்ப்பால் இரு இளம்பெண்கள் காதலித்து, ஆணாக மாற ஆப்ரேஷன் செய்து திருமணம் செய்வதற்காக வீட்டில் இருந்து சென்னை சென்றுள்ளனர். அவர்களை போலீசார் துரிதமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் முறையே பெரம்பலூர் தனியார் கல்லூரிகளில் பி.ஏ ஆங்கிலம், மற்றும், பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்.,5) கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற இரு மாணவிகளும், மாலை நீணட நேரமாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பார்த்தனர். கிடைக்காததால், பெரம்பலூர் போலீசில் இரு மாணவிகளின் பெற்றோர்களும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களின் செல்போனை ஆய்வு செய்த போது, லாடபுரத்தில் உள்ள மாணவன் ஒருவரிடம் கொடுத்து விட்டு அவனது செல்போனை வாங்கி சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், காணாமல் போன இரு மாணவிகளும் குரும்பலூர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வந்த நெருங்கிய தோழிகள் எனவும் தற்போது பெரம்பலூர் கல்லூரிகளில் இருவரும் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 5ம் தேதி காலை கல்லூரிப் பேருந்தில் ஏறி கல்லூரி செல்வதாக சென்ற மாணவிகள், கல்லூரிக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்று விட்டனர் என்பது தெரியவந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.