முகத்தில் அதிகப்படியான கொழுப்பா? இதோ வெங்காய வைத்தியம்..

பொதுவாக தொடை, வயிறு, கை, போன்ற பகுதியில் இருக்க கூடிய கொலஸ்ட்ராலை நம்மால் முயன்றவரை டயட், ஜிம், உடற்பயிற்ச்சிகள் மூலம் குறைக்க இயலும். ஆனால் முகத்தில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை நாம் இலகுவில் குறைப்பது என்பது கடினம்.

பொதுவாக வெங்காயத்தின் பயன்கள் எண்ணில் அடங்காதவை என்பது அனைவரும் அறிந்ததே.

உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைக்க இந்த வெங்காயம் பெரிதும் உதவும்.

வெங்காயாத்தை வைத்து எளிதாக முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • உப்பு ஒரு சிட்டிகை
  • வெங்காய சாறு 1 ஸ்பூன்
செய்முறை

வெங்காயத்தை அரைத்து கொண்டு, அதன் சாற்றுடன் உப்பை சேர்த்து கொள்ளவும்.

பிறகு இதனை முகத்தில் தடவி இரவு நேரத்தில் இரவு முழுவதும் காய விட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவவும்.

இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து முகம் மிருதுவாக மாறிவிடும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.