தடை மீறி நடக்கும் செங்கல் சூளை: அதிகாரிகள் ஆசியுடன் கனிம வளம் கடத்தல்!!!

தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு விட்டது. இதோ இப்போது செங்கல் தயாரிப்பு மாவட்ட எல்லையில் ஜோராக நடந்து வருகிறது. நமது ஊரின் கனிம வளம், அண்டை மாநிலமான கேரளாவுக்கு செங்கல் வடிவில், அதுவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் துணையுடன் கொள்ளை போகிறது.

”தமிழக- – கேரள எல்லையை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான ஐயம்பதி, முருகம்பதி, புதுபதி, சின்னாம்பதி, ரங்கசமுத்திரம், அப்பாச்சி கவுண்டன்பதி, வலுக்கல் உள்ளிட்ட பகுதிகளில், முறையான அனுமதி பெறாமல் 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்குகின்றன.

பருவமழை காலத்தை தவிர, ஆண்டு முழுவதும் இந்த சூளைகள் இயங்குகின்றன.ஏழு ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், செங்கல் சூளைகளுக்கான அனுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதே போல், கோவை தடாகத்தில் 197 செங்கல் சூளைகள் மூடப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.