ஸ்மிருதி இரானி பேச்சால் சலசலப்பு!!

புதுடில்லி: லோக்சபாவில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் எம்.பி., கீதா விஸ்வநாத் வங்காவை பெண் எம்.பி., என அழைத்தார்.இதற்கு, காங்.,கின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் திரிணமுல் காங்.,கின் சவுகதா ராய் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மாண்புமிகு உறுப்பினர் என ஸ்மிருதி இரானி அழைத்திருக்க வேண்டும்’ என, அவர்கள் தெரிவித்தனர்.இதற்கு பதில் அளித்த ஸ்மிருதி இரானி, ”பெண் எம்.பி.,யை பெண் என்று குறிப்பிடுவதில் எந்தவித மரியாதை குறைவும் இல்லை,” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.