ரூ.200 கோடியில் டில்லியில் புதிதாக தமிழக விருந்தினர் இல்லம்!!!
சென்னை: டில்லி சாணக்கியபுரியில், தமிழக அரசுக்கு சொந்தமாக, ஐந்து விருந்தினர் இல்ல கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.
டில்லியில், 50 ஆண்டுகளுக்கு மேலான கட்டடங்களை இடிக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதன்படி, இங்குள்ள மூன்று விருந்தினர் இல்ல கட்டடங்களை இடித்து, 57 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்ட, அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது; ஆனால், நிதி ஒதுக்கப்படவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.