ராணுவ பள்ளியில் பிராந்திய மொழி தேவையா?

புதுடில்லி: லோக்சபாவில், ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் பேசியதாவது: ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகளுக்காக, நாடு முழுதும் 136 ராணுவ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வீரர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என்ற சூழல் உள்ளது. இதனால், ராணுவ பள்ளிகளில் பிராந்திய மொழி கற்பிப்பது, மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.