மத்திய நிதிக்குழு வலியுறுத்தியதால் சொத்து வரி உயர்வு: அமைச்சர்!

சென்னை: மத்திய நிதிக்குழு வலியுறுத்தியதால் தான் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களுக்கான சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்..

இந்நிலையில், டில்லியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது: மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சொத்து வரி உயர்வு அவசியம்ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதிக்குழு கூறியதன் அடிப்படையில் சொத்து வரி உயர்ந்துள்ளது.சொத்து வரி உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என மத்திய அரசு கூறிவிட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.