தடுப்பூசியால் தப்பித்தோம்: சுகாதாரத்துறை அமைச்சர்!!
புதுடில்லி: லோக்சபாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: கொரோனா பரவலின் போது, உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பான வழிகாட்டலை அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நிர்வாகத்தால், கொரோனா கட்டுப்பாடுகள் சிறப்பாக கையாளப்பட்டன. ‘ஒமைக்ரான்’ தொற்று பரவலின் போது உலக அளவில் உயிரிழப்புகள் அதிகரித்த போதும், நம் நாட்டில் உயிரிழப்புகள் கட்டுக்குள் இருந்ததற்கு தடுப்பூசி திட்டமே காரணம்.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.