டில்லியில் ‛‛வாக்கிங்” சென்ற ஸ்டாலின்: செல்பி எடுத்துக் கொண்ட மக்கள்!!
புதுடில்லி: 3 நாள் பயணமாக டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், நேரு பூங்காவில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த பொது மக்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.
3 நாள் பயணமாக டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல், நிதின் கட்காரி உள்ளிட்டோரை சந்தித்தார். நேற்று டில்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினார். இன்று திமுக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை, நேரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொது மக்கள், ஸ்டாலினுடன் கைகுலுக்கியும், செல்பி எடுத்து கொண்டனர். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.