சி.பி.ஐ., நிரந்தரமானது: தலைமை நீதிபதி ரமணா கருத்து!!

புதுடில்லி : ”அரசியல் தலைமைகள் மாறலாம்; ஆனால், நீங்கள் நிரந்தரமானவர்கள்,” என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

டில்லியில் சி.பி.ஐ., சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: சமீபகாலமாக சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதற்கு சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் தான் காரணம். அரசியல் தலைமைகளுடன் உள்ள நெருக்கத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைவிட வேண்டும். ஏனெனில் அரசியல் தலைமைகள் மாறலாம். ஆனால், நீங்கள் நிரந்தரமானவர்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.