சித்திரை திருவிழா தகவல் அறிய ‘மாமதுரை’ செயலி!

மதுரை : மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த சித்திரை திருவிழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் விழா தகவல்களை அறிய ‘மாமதுரை’ என்ற செயலி உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி, ஆவணி மூல வீதிகளில் துாய்மை பணி, பக்தர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு, தீயணைப்பு ஆம்புலன்ஸ், தகவல் மையம், குடிநீர், நடமாடும் கழிவறை சி.சி.டி.வி., கேமரா, மின்சாரம், மின் விளக்கு, எல்.இ.டி., திரை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.