இலங்கை மக்களின் போராட்ட அறிவிப்பு: இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்!!
இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்சே அரசை கண்டித்து மாபெரும் போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்தனர். போராட்ட அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கையாக இலங்கை அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.