இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகல்!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகினார். மே 1-ம் தேதி முதல் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்காக மக்கள் வரிசையில் நிற்பது வேதனை அளிப்பதாக ரோஷன் ரணசிங்கே தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த ரணசிங்கே பதவி விலகியது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் மக்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து இலங்கையரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது, இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இலங்கை சிக்கியுள்ள நிலையில் அன்றாட தேவைகளுக்கு மக்கள் மிகவும் சிரமமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.