அரபி குத்து பாடலின் புது சாதனை – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!!
நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் பாடிய அரபிக்குத்து பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடல் யூ டியூப்பில் 250 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.