அமைச்சர் ராஜகண்ணப்பனை பதவி நீக்க வலியுறுத்தி போராட்டம்!

முதுகுளத்துார்: ‘முதுகுளத்துார் ஒன்றிய பி.டி.ஓ., ராஜேந்திரனை சிவகங்கையிலுள்ள தன் வீட்டிற்கு வரவழைத்து ஜாதியை குறிப்பிட்டு ஒருமையில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பனை பதவியில் இருந்து நீக்க வேண்டும்,’ என முதுகுளத்துாரில் தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

அமைச்சரை கண்டித்து தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. நேற்று முதுகுளத்துார் தேரிருவேலி முக்குரோடு அருகே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் அனைத்து கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.