ரஷியாவின் தாக்குதலுக்கு இதுவரை 148 குழந்தைகள் பலி..!! உக்ரைன் அதிர்ச்சி தகவல்!!

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:- 
ஏப்ரல் 01,  04.56 a.m 
அமெரிக்க இராணுவ உதவி ஏற்கனவே உக்ரைனுக்கு வந்துவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 01,  04.21 a.m 
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – ரஷிய அதிபர் புதின் இடையே பேச்சுவார்த்தைக்கான தற்போதைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது
ஏப்ரல் 01,  03.47 a.m 
ரஷிய வீரர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேறி விட்டனர்: உக்ரைன் அதிகாரிகள் தகவல்
ஏப்ரல் 01,  03.14  a.m 
மனிதாபிமான பாதை மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. 
ஏப்ரல் 01,  02.50 a.m 
வரும் நாட்களில் ரஷியாவுக்கு எதிராக வர்த்தகத் துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்: வெள்ளை மாளிகை தகவல்
ஏப்ரல் 01,  02.05 a.m 
ரஷியப் படைகள் 148 குழந்தைகளை கொன்றதாகவும், 1,370 ஏவுகணைகளை வீசியதுடன், 15 விமான நிலையங்களை அழித்துள்ளதாகவும் கீவ் தெரிவித்துள்ளது. 
பிப்ரவரி 24 ஆம் தேதியன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஷிய படைகள் குண்டுவீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களின் போது 148 குழந்தைகளைக் கொன்றது. மேலும் 1,370 ஏவுகணைகளை வீசியதுடன், 15 உக்ரைனின் விமான நிலையங்களை அழித்துள்ளது என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
ஏப்ரல் 01,  01.13 a.m 
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சாதனை லாபத்தை ஈட்டுகின்றன – ஜோ பைடன்
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அதிக பெட்ரோல் விலையை பெற்றுவரும்நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் சாதனை லாபம் ஈட்டுவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி ஜோ பைடன், முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பதை விட அதிக எண்ணெய் உற்பத்தி செய்ய அல்லது செயலற்ற கிணறுகளை மீண்டும் தொடங்க பணத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், உங்கள் நாட்டின் நலனுக்காக முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார். 
ஏப்ரல் 01,  12.35 a.m 
புதின் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 
“ரஷிய அதிபர் புதின் தன்னைத்தானே தனிமைப்படுத்துவது போல் தெரிகிறது. அவர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அவர் சில உயர் ஆலோசகர்களை பணிநீக்கம் செய்துள்ளார் அல்லது வீட்டுக் காவலில் வைத்துள்ளார் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன என்று அமெரிக்க ஜனாதிபரி ஜோ பைடன் கூறினார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.