மாமன்ற நிலைக்குழு தலைவர்கள் தேர்தல்: காங்., – மா.கம்யூ., கவுன்சிலர்கள் ஆப்சென்ட்!!!

கோவை: கோவை மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் தேர்தல் நேற்று நடந்தது; காங்., மற்றும் மா. கம்யூ., கவுன்சிலர்கள் வரவில்லை. இருப்பினும், போதுமான கவுன்சிலர்கள் வந்திருந்ததால், அனைத்து பதவிகளுக்கும், தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கோவை மாநகராட்சி மாமன்றத்தில் ஏழு நிலைக்குழுக்கள் இருக்கின்றன. நியமன குழு உறுப்பினராக ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.இதேபோல், மற்ற நிலைக்குழுக்களுக்கு நேற்று மதியம், 2:30 மணிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் பணியாற்றினார். அந்தந்த குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தலைவரை தேர்வு செய்தனர்.
தி.மு.க., தலைமை அறிவித்தபடி, கணக்கு குழு தலைவராக தீபா, பொது சுகாதார குழு தலைவராக மாரிச்செல்வன், கல்விக்குழு தலைவராக மாலதி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவராக முபசீரா, நகரமைப்பு குழு தலைவராக சந்தோஷ், பணிகள் குழு தலைவராக சாந்தி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நிலைக்குழு தலைவர்கள் தேர்தலுக்கு அந்தந்த கமிட்டி கவுன்சிலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. ஆனாலும், கல்விக்குழு தலைவர் தேர்வு செய்யும் தேர்தலில் 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, வரி விதிப்பு குழு தலைவர் தேர்தலில், 12வது வார்டு மா.கம்யூ., கவுன்சிலர் ராமமூர்த்தி ஆகியோர் ‘ஆப்சென்ட்’ ஆகினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.