பூட்டு உடைத்து ஜெபம்: திருப்பூர் சர்ச்சில் சர்ச்சை!!

திருப்பூர் : ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வந்த நிலையில், சர்ச் பூட்டு உடைக்கப்பட்டு ஜெபம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், அவிநாசி ரோடு,ராமையா காலனியில் ஏ.ஜி., சர்ச் உள்ளது. இங்கு பணியாற்றிய மதபோதகர் அலெக்சாண்டர் மீது ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர். எதிர் தரப்பினர், மற்றொரு மதபோதகர் மீது பாலியல் புகார் எழுப்பினர். இதனால், சில மாதங்களுக்கு முன் சர்ச் பூட்டப்பட்டது. திருப்பூர் ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.