புதுச்சேரி கலால் வருமானம் ரூ.1000 கோடியை தாண்டியது!!

புதுச்சேரி: புதுச்சேரி கலால் வருமானம் முதல் முறையாக 1063 கோடி ரூபாயை கடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில், கள்ளுக்கடைகள்- 50, சாராயக்கடைகள் – 80, மதுபான கடைகள் – 284 உள்ளன. மாநிலத்தின் வருவாயில், கலால் துறை பெரும் பங்காற்றுகிறது. கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கலால் வருவாய் பெரிதும் பாதித்தது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் கலால் வருவாய் முதல் முறையாக 1063 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.