தி.மு.க.,வை கண்டித்து போராட்டம்; காங்., சிறுபான்மை பிரிவு திட்டம்!!
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் பதவி விவகாரத்தில், தி.மு.க., ஏமாற்றிவிட்டதால், தி.மு.க., மீது காங்., சிறுபான்மை பிரிவினர் கோபத்தில் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,- – ஆறு; சுயேச்சை – நான்கு; அ.தி.மு.க.,- – மூன்று; பா.ம.க.,- மற்றும் காங்.,- தலா ஓரிடம் வென்றன.தி.மு.க., தலைமை கழகம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் பதவியை, காங்.,குக்கு ஒதுக்கியது.
கடந்த 2ம் தேதி நடந்த தலைவர் தேர்தலில் தி.மு.க., உத்தரவை மீறி, தி.மு.க.,வைச் சேர்ந்த சாந்தி போட்டியிட்டு, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றார்.இதையடுத்து, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடத்தில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், பதவியை ராஜினாமா செய்து, தன்னை நேரில் சந்திக்குமாறு முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.