கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெறலாம்!!!

சென்னை: ‘கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அரசின் செய்திக் குறிப்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு, கருணைத் தொகை வழங்க, www.tn.gov.in என்ற இணையதளம் வழியே மனுக்கள் பெறப்பட்டன. அவை, மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, இறப்பை உறுதி செய்யும் குழுவால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை, 74 ஆயிரத்து 97 மனுக்கள் பெறப்பட்டு, 55 ஆயிரத்து 390 பேருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13 ஆயிரத்து 204 மனுக்கள், ‘இரு முறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.