லாரி மீது வேன் மோதி 4 பேர் பலி!!

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு வேலை செய்யும் ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் இன்று (மார்ச் 31)காலை சென்றது. ஆம்பூர் அருகே சூலூர் என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பில் மோதி எதிர்ப்புறம் இருந்த சாலையில் சென்றுல எதிரே வந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.