மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியன் செட்டியாபத்து ஊராட்சிக்கு உட்பட்ட தேரியூரில் ரூ 2 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் துவக்க விழா நடந்தது. இதில் செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். இந்த புதிய கட்டிடத்தை தமிழக மீன்வளம், மீன்வர் நலத்துறை,மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடக்கிறது. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். தமிழகம் பல்வேறு வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
 தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து தினசரி 20 மணி நேரம் தமிழக மக்களை பற்றி சிந்திக்கும் முதல்வரை நாம் தேர்ந்தெடுத்து உள்ளோம். அப்படிப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் அனைவரும் என்றும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.