டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் பாஜகவினர் தாக்குதல்!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு பாஜக இளைஞரணியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு தடுப்புகள் உடைக்கப்பட்டு வாயிற்கதவில் காவி பெயிண்ட் வீசியுள்ளனர். பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா தலைமையில் அக்கட்சியினர் இச்செயலில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியும், அடையாளம் தெரியாத நபர்கள் என டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.