சசிகலா வழக்கில் ஏப்ரல் 8ல் தீர்ப்பு?

சேலம் : அ.தி.மு.க., பொதுச் செயலர் தொடர்பான வழக்கில், ஏப்., 8ல் தீர்ப்பு வெளியாகலாம் என்ற தகவலால், சசிகலாவின் கொங்கு மண்டல பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பங்குனி அமாவாசையான இன்று(மார்ச் 31), கொங்கு மண்டலத்திற்கு சென்று, தன் ஆதரவாளர்களை சந்திக்க, சசிகலா திட்டமிட்டிருந்தார். அ.தி.மு.க., பொதுச்செயலர் யார் என, சென்னை சிவில் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் தீர்ப்பு, ஏப்., 8ல் வெளியாகலாம் என்ற, தகவல் பரவி வருகிறது. இதனால், அவரது இன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீர்ப்பு வரும் நாளில் கோவில்களுக்கு செல்லும் வகையில், அவரது பயண திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்., 8ல் திருச்சியில் தங்க உள்ளார். அடுத்த நாள், நாமக்கல் ஆஞ்சநேயர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். அன்றிரவு சேலம் மாமாங்கத்தில் உள்ள ஹோட்டலில் ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.