கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006ம் ஆண்டு பாஜக மற்றும் மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க 434 ஏக்கர் இடத்தை கர்நாடகா அரசு கையகப்படுத்தியது  இதில் துணை முதல்வராக எடியூரப்பா தலையிட்டு குறிப்பிட்ட இடத்தை நில மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டு தனியார் ஒதுக்கினார் என்பதே புகார்.

இது தொடர்பாக வாசுதேவ ரெட்டி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தற்போது நீதிபதி ஜெயந்த குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார். மனுதாரர் தரப்பு கொடுத்த ஆவணத்தில் முறைகேடு நடந்ததற்கு முகாந்திரம் இருப்பதால் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து உரிய ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதே பிரச்சனையில் லோக் ஆயுக்தா போலீஸ் ஏற்கனவே விசாரணை நடத்தி எடியூரப்பா மீதான புகாரில் உண்மை இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.