இலங்கையில் டீசல் பற்றாக்குறை 10 மணி நேரம் மின் துண்டிப்பு….

கொழும்பு: இலங்கையில் டீசல் பற்றாக்குறை நிலவுவதால், நேற்று முதல் மின்சாரம் துண்டிப்பு 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், இறக்குமதி, சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கப்பட்டு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நாட்டில் உள்ள நீர் மின் நிலையங்களுக்கு மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. இதனால், தினசரி 6 மணி முதல் 8 மணி நேரம் வரை அமல்படுத்தப்பட்டு வந்த மின்வெட்டு நேரம், நேற்று முதல் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  

பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை
இலங்கை ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, இலங்கை உடனான இந்தியாவின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய ஒப்பந்தங்களினால், இரு நாடுகளுக்கும் இடையே எந்த வித தடையோ அல்லது அச்சுறுத்தல்களோ கிடையாது. இப்பிராந்தியத்தில் செல்லும் கப்பல்கள் ஆபத்திலோ, இடரிலோ சிக்கும்போது அதனை உடனடியாக தேடவும், மீட்கவும் இந்த மையங்கள் சர்வதேச கடல்சார் விதிகளின் படி செயல்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.