அனுமதி ஓரிடம்… அள்ளுவது ஓரிடம்: அமைச்சர் பெயரில் மண் திருட்டு!!
மதுரை:பாலமேடு அருகிலுள்ள எர்ரம்பட்டி பகுதி விவசாய நிலங்களை சீரமைப்பதாக அனுமதி பெற்ற தி.மு.க.,வினர் பாலமேடு மஞ்சமலை ஆறு, பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் மண் அள்ளுகின்றனர். கனிமவளத் துறையிடம் 3 முதல் 6 அடி ஆழத்திற்கு அனுமதி பெற்று ஒருவாரமாக 10 அடிக்கு மேல் மண் அள்ளுகின்றனர். தினமும் லாரிகளில் மண் அள்ளி செங்கல் காளவாசலுக்கு விற்கின்றனர். ஒரே நடை சீட்டில், தேதி, நேரத்தை அழித்துவிட்டு மறுபடி பயன்படுத்துகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.