40 லட்சம் பேல் பருத்தி இறக்குமதி செய்ய ஜவுளி அமைப்புகள் வலியுறுத்தல்!!

கடந்த ஆண்டு பிப்ரவரியில் பருத்தி பஞ்சு விலை ஒரு கேண்டி (355 கிலோ எடை) 44 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. தற்போது 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பருத்தியை மையமாக கொண்டு செயல்படும் ஜவுளித்தொழில்கள் அனைத்தும் பின்னடைவை சந்தித்துள்ளன. கொரோனா பிடியிலிருந்து ஜவுளித்துறை வெளிவந்தாலும், தற்போது ஜவுளித்துறையை சார்ந்த மில்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ஆக., முதல் அக்., வரையிலான காலகட்டத்தில் பருத்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். வர்த்தகர்கள் ஆன்லைன் தளங்களை சாதகமாக பயன்படுத்தி, பருத்தியை பதுக்கல் செய்து அன்றாட விலையை உயர்த்தி யூக பேர வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.