ரூ.10 கோடியுடன் வழக்கு தொடர தயாராகுங்க!!

உலகிலேயே தங்களை விட புத்திசாலிகள் யாரும் கிடையாது என்று, எண்ணிக் கொண்டிருப்பவர்கள் யார் என்றால், அது தி.மு.க.,வினர் தான். தங்களை எதிர்ப்பவர்களை, அடியாட்களை ஏவி விட்டு அடித்து நொறுக்குவர். இல்லையெனில், கோடிகளில் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வோம் என்று, வழக்கறிஞர் வாயிலாக, ‘நோட்டீஸ்’ அனுப்புவர்.

‘முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வுக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தவும், அவதுாறு ஏற்படுத்தவும், அண்ணாமலை தொடர்ந்து முயற்சித்து வருகிறார். 24 மணி நேரத்தில், அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வோம்’ என்று அறிவித்திருந்தார், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி. ஆர்.எஸ்.பாரதி அறிவித்து, ஒரு வாரமாகிறது. அண்ணாமலை மன்னிப்பும் கேட்கவில்லை. நெடுஞ்சாண்கிடையாக, சாஷ்டாங்கமாக யார் காலிலும் விழவுமில்லை. ‘தில்’லாக உலாவி வருகிறார்.

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி உள்ள நிலையில், மத்தியில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், முன்னர் ஒரு முறை, நாஞ்சில் மனோகரனை, விமான நிலையம் செல்லும் வழியில் தி.மு.க.,வினர் மடக்கி, அடித்து துவம்சம் செய்தது போல, இப்போது, அண்ணாமலையையும் அடித்து, உதைக்க முற்பட்டிருப்பர். கழகத்திற்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல், மத்தியில் பா.ஜ., அரசு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.