முதல்வர் துபாய் பயண பின்னணியில் சபரீசன் – யூசுப் அலி!

சென்னை :முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில், முக்கிய பங்காற்றிய தொழிலதிபர் யூசுப் அலியின், ‘லுாலுா’ குழுமம், தமிழகத்தில் 3,500 கோடி ரூபாயில், ‘சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால்’களை துவங்க உள்ளது.

முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக, 24-ல், தனி விமானத்தில் குடும்பத்துடன் துபாய் சென்றார் ஸ்டாலின். நான்கு நாள் பயணத்தில், லுாலுா நிறுவனத்துடன் 3,500 கோடி ரூபாய்; ‘நோபல் ஸ்டீல்ஸ்’ நிறுவனத்துடன் 1,000 கோடி ரூபாய்; ‘ஒயிட் ஹவுஸ், ஆஸ்டர் டி.எம்.ஹெல்த்கேர், ஷெராப்’ ஆகிய நிறுவனங்களுடன் தலா 500 கோடி ரூபாய். ‘டிரான்ஸ்வேர்ல்டு’ குழுமத்துடன் 100 கோடி ரூபாய் என, ஆறு நிறுவனங்களுடன், 6,100 கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.ஸ்டாலினின் முதல் வெளிநாட்டு பயணத்தை, தி.மு.க.வும், தமிழகஅரசும் பெரிய சாதனையாக கொண்டாடி வருகின்றன. கூட்டணி கட்சி தலைவர்களும், ஸ்டாலினுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.