போயாச்சு கொரோனா தொற்று; கோர்ட்டில் இருக்கு கட்டுப்பாடு!

கோவை: கோவை கோர்ட் வளாகத்தில் தொடரும் கட்டுப்பாடு காரணமாக, வக்கீல்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக, கோவை நீதிமன்ற வளாகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, பிப்.,7 முதல் வழக்கம் போல நேரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், நீதிமன்ற வளாகத்தில் தொற்று பாதிப்பின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன.கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பிறகும், கோர்ட் வளாகம் முழுவதும் வாகனம் நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.