பிரியாணி கடையில் மாமூலுக்காக மல்லுக்கட்டிய திமுக.,வினர்!!
திருநீர்மலை: சென்னை திருநீர்மலையில் மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில் பிரியாணி கடை மீது தாக்குதல் நடத்திய திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளர் தினேஷ், திமுக உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திமுக.,விற்கு தலைவலியை ஏற்புடுத்திய நிலையில், கட்சியினருக்கு அறிவுரைகள் வரலாம் எனுக் கூறப்படுகிறது.
பல்லாவரம்-, திருநீர்மலை சாலை, சுப்புராய நகரில், முகமது ஹனீஸ், 32, என்பவர், டீ மற்றும் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, சங்கர் நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான, திருநீர்மலை, சிவராஜ் தெருவைச் சேர்ந்த சுகுமார், 32, சுப்புராய நகரைச் சேர்ந்த தினேஷ், 38, ஆகிய இருவர், முகமது ஹனீசின் கடைக்கு சென்று, மாமூல் கேட்டுள்ளனர்.
தினேஷ், தாம்பரம் மாநகராட்சியின், 31வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலரான சித்ரா முரளிதரனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைக்காரர் மாமூல் தர மறுத்ததால், ஆத்திரமடைந்தவர்கள் செங்கல்லை எடுத்து கடை கண்ணாடியை உடைத்தனர். பின், ‘எப்படி இங்கு வியாபாரம் செய்கிறாய் என்று பார்ப்போம்’ என்றும் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரித்த சங்கர் நகர் போலீசார், சுகுமார் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும், நேற்று காலை கைது செய்தனர். சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.