திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள்: தமிழிசை!!

தன்னை அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் ஒருமையில் பேசியதாக வருத்தம் தெரிவித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ‘திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள், தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்’ என அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அயல்நாட்டு கல்வித்துறை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை, சென்னை வானவில் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை நடத்தின. இதை தொடக்கி வைத்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும். பெண்கள் உயர்விற்காக பாரதியார் மிகவும் பாடுபட்டுள்ளார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் வேண்டும் என்று தெரிவித்த அவருக்கு பெண்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.